உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராமசபை தீர்மானங்களுக்கு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு

கிராமசபை தீர்மானங்களுக்கு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு

அக். 2, ஆக. 15ல் ஊராட்சிகள் தோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும். வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படும். நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசப்படும். நீண்ட நாள் நடைபெறாமல் இருக்கும் பணிகள் குறித்து பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் தர்ம சங்கடமான நிலை ஏற்படும்.இதற்காகவே பெரும்பாலான ஊராட்சிகளில் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்வது கிடையாது. திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்பது கிடையாது. இதனால் கிராம சபை கூட்டம் நடைபெறும் போது பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி, எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. சாக்கடை சுத்தம் செய்வது, குடிநீர் பிரச்னை, ரோடு வசதி, தெருவிளக்கு, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு மருந்து அடித்தல், மயான சாலை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன.ஆனால் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் வளர்ச்சி திட்ட பணிகள் காலதாமதம் ஏற்பட்டு நடைபெறாமல் போகிறது. தீர்மானங்கள் ஏட்டளவில் நின்றுவிடுகின்றன. வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவிக்கின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுரும் தருவாயில் உள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்படலாம். அவ்வாறு இருக்க ஆக. 15ல் நடந்த கிராம சபை கூட்டம் கூட கடைசி கூட்டமாக இருக்கலாம். கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நிதி இல்லாமல் கிடப்பில் போடுவதற்கு வாய்ப்பு உள்ளது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி வழங்கினால் மட்டுமே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விரைந்து முடிக்க முடியும். அதற்கான நிதியை ஒதுக்கி தர உள்ளாட்சி பிரதிநிதிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை