உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடியில் மின் கட்டண வசூல் மையத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

நரிக்குடியில் மின் கட்டண வசூல் மையத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

நரிக்குடி: நரிக்குடியில் துணைமின் நிலையத்தில் செயல்பட்ட மின் கட்டண வசூல் மையத்தை மீண்டும் திறந்து திறக்கப்படாமல் உள்ள புதிய கட்டத்தில் செயல்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நரிக்குடியைச் சுற்றி உள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வசதி சப்ளை பெற நரிக்குடியில் 30 ஆண்டுகளுக்கு முன் துணைமின் நிலையம் துவக்கப்பட்டது. அங்கு நுகர்வோர் மின் கட்டண வசூல் மையம் ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் கட்டடம் சேதம் அடைந்தது. தற்காலிகமாக கட்டண வசூல் மையம் வீரசோழனுக்கு மாற்றப்பட்டது. அங்கு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நரிக்குடி துணை மின் நிலையத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலானது. இதுவரை கட்டண வசூல் மையம் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இப்பகுதி நுகர்வோர்கள் அனைவரும் வீரசோழனுக்கு சென்று மின் கட்டணம் செலுத்துகின்றனர். ஒரு நாள் வேலை பாதிக்கப்படுகிறது.தற்போது ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி இருந்தாலும், பெரும்பாலான நுகர்வோர்கள் விவசாயிகளாக இருப்பதால் ஆன்லைன் குறித்து விவரங்கள் தெரியாது. நேரடியாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் நேரம், பணம் விரையமாவதால் பாதிக்கப்படுகின்றனர்.நரிக்குடி துணை மின் நிலையத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்படுத்தாமல் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. செயல்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.நரிக்குடி துணை மின் நிலையத்தில் மின் கட்டண வசூல் மையத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை