உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராம சபையில் வாக்குவாதம்

கிராம சபையில் வாக்குவாதம்

விருதுநகர் விருதுநகர் ஒன்றியத்தின் கூரைக்குண்டு ஊராட்சி அல்லம்பட்டி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் மீனா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டம் துவங்கியதும் மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், 2024 ஏப். 1 முதல் மார்ச் 31 வரையான வரவு, செலவு அறிக்கையை படிக்குமாறு தெரிவித்தார். தணிக்கை முடியாததால் அறிக்கையை கூட்டத்தில் படிக்க இயலாது என ஊராட்சி செயலாளர் பதிலளித்தார். ஆனால் அனைத்து ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் இறுதிக்குள் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் தணிக்கை முடியவில்லை என்பதை நம்ப முடியாது என காளிதாஸ் தெரிவித்தார். இதனால் அரசு அலுவலர்களுக்கும், ம.நீ.ம., கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் துவங்கிய 25 நிமிடங்களிலேயே நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி