கட்டுரை வெளியீட்டு விழா
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான தீபம் பார்த்தசாரதியின் பெயர் பலகை திறப்பு விழா, கட்டுரை வெளியீட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் சுதாகர், பள்ளி தலைவர் ஜானகி, சத்திர கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் பெயர் பலகையை முன்னாள் செயலாளர் சீதாராமன் திறந்து வைத்தார். மேலும் அப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் எழுதிய அணையா தீபம் என்ற கட்டுரை மலரை நிதி கமிட்டி தலைவர் சுந்தரராஜன் பெற்றுக் கொண்டார். விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.