உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகரில் சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள், செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிகள் பங்கேற்று பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி