மேலும் செய்திகள்
தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு
24-Jul-2025
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்தது. திறன் மேம்பாட்டு கழக நிதி உதவியுடன் நான் முதல்வன் பள்ளி கல்வி நிறைவுறுதல் திட்டத்தின் கீழ், கிராம புற இளைஞர், மகளிருக்கு நடந்த தேனீ வளர்ப்பு பயிற்சி துவக்க விழாவிற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் தலைமை வகித்தார். தொழில்நுட்ப வல்லுநர் ஜட்டா கவிதா, வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்கின்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பேராசிரியர்கள், தொழில் முனைவோர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொழில்நுட்ப வல்லுநர் ஷீபா விவசாய பயிர்களில் தேனீ மகரந்த சேர்க்கை முக்கியத்துவம் பற்றி விளக்கினார். விவசாயிகள் தேனீக்களின் செயல்பாட்டை நேரடியாக பார்வையிட்டனர்.
24-Jul-2025