கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு ஊராட்சியை இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ., சீனிவாசன், கலெக்டர் ஜெயசீலனிடம் மனு அளித்தனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இந்நிலையில் 2ம் கட்டமாக நேற்று செவல்பட்டி, கூரைக்குண்டு பகுதிகளில் போராட்ட குழு சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.