மேலும் செய்திகள்
பொன்னேரியில் ரத்ததான முகாம்
16-Aug-2025
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் அகில உலக ரத்த தான முகாம் நடந்தது. பிரம்மா குமாரிகளின் முன்னாள் தலைமை நிர்வாகி பிரகாஷ்மணியின் நினைவு நாளை உலக சகோதரத்துவ தினமாக கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு பிரம்மா குமாரிகளின் தலைமையகம் அகில இந்திய அளவிலான ரத்ததான முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். அருப்புக்கோட்டையில் உள்ள பிரம்மா குமாரிகள் மையத்தில் ரத்ததான முகாம் நடந்தது. அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் நிஷாந்த் தலைமையில் மருத்துவக் குழுவினர் 41 பேர்களிடம் ரத்ததானம் பெற்றனர். ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் செய்திருந்தனர்.
16-Aug-2025