ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி
விருதுநகர்: ராஜபாளையத்தில் மதுரை மீனாட்சி புக் ஷாப், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி நேற்று முன்தினம் (நவ. 6) முதல் துவங்கியது. காந்தி கலை மன்றத்தில் நடக்கும் இந்த கண்காட்சி நவ. 20 வரை நடக்கிறது. இலக்கியம், நாவல்கள், சிறுகதைகள், அறிவியல் புனைவு கதைகள், வரலாற்று கதைகள், போட்டி தேர்வு உள்ளிட்ட பல வகையான புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். ஞாயிறும் விற்பனை உண்டு. இங்கு தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும்.