| ADDED : நவ 19, 2025 07:52 AM
விருதுநகர்: ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது ஒரு நுாலகம் கட்டுவேன் என்று பதில் அளித்தார் காந்தி. மனிதனின் ஆகச்சிறந்த கண்டு பிடிப்பு எது என கேட்ட போது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்வாழ்வை தெரிந்து கொள்ளவும், ஒவ்வொரு வயதிலும் வரும் தடைகளை புரிந்து கொள்ளவும் நாம் அந்தந்த வயதுகளில் படிக்கும் புத்தகங்கள் பெரும் உதவியாக இருக்கும். விருதுநகர் - மதுரை ரோடு கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நவ. 24வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. 5நாட்களில் 40 ஆயிரம் பேர் வரை பார்வையிட்டுள்ளனர். இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், அரசியல், மருத்துவம், பொது அறிவு, சமையல், குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டி தேர்வு புத்தகங்கள் அதிகம் உள்ளன. இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம். மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு பேச்சாளர்கள் பேசுகின்றனர்.