உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  திருத்தங்கலில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ் வசதி

 திருத்தங்கலில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ் வசதி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலையிலிருந்து சிவகாசி வழியாக திருத்தங்கலுக்கு புதிய டவுன் பஸ் வசதி செய்து தர வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் மலைவாச பெருமாள் ஸ்தலங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலும், 108 வைணவ தலங்களில் ஒன்றான திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலும் உள்ளது. இக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட ஆன்மிக பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் போதிய அளவிற்கு நேரடி பஸ் வசதிகள் இல்லை. 3 பஸ்கள் மாறி பயணிக்க வேண்டியதால் பக்தர்கள் சிரமம் அடைந்து வரு கின்றனர். என வே, தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி வழித்தடத்தில் இயங்கும் அரசு டவுன் பஸ்களில், 25 சதவீத பஸ்களை ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு சிவகாசி வழியாக திருத்தங்கலுக்கு புதிய வழித்தடமாக இயக்க விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர் பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை