உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயில்வே பீடர் ரோட்டில் அசுர வேகத்தில் பஸ்கள் -

ரயில்வே பீடர் ரோட்டில் அசுர வேகத்தில் பஸ்கள் -

ராஜபாளையம்,: ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் அசுர வேகத்தில் செல்லும் அரசு தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களால் பள்ளி மாணவர்கள் ரயில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில்வே பீடர் ரோடு அமைந்துள்ளது. பஞ்சு மார்க்கெட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பி வர வேண்டிய அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நேரத்தை மிச்சப்படுத்த ரயில்வே ஸ்டேஷன் அருகே தொடங்கும் இந்த ரோட்டில் நுழைந்து மெயின் ரோட்டை அடைகின்றன. பள்ளிகள் அதிகம் உள்ள இந்த ரோட்டில் வேகம் எடுக்கும் வாகனங்களால் பள்ளி மாணவர்கள் ரயில் பயணிகள் உயிர் பயத்தில் ஒதுங்கி வழிவிட வேண்டியுள்ளது. ஏற்கனவே மேடு பள்ளங்களாக உள்ள ரோட்டில் வேகம் எடுக்கும் வாகனங்கள் வேக கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். வாகனங்களை வேக கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற செய்வதுடன், வாகனங்களில் ஒலிக்க விடும் ஏர் ஹாரன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை