உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு தயாரிப்பு இருவர் மீது வழக்கு

பட்டாசு தயாரிப்பு இருவர் மீது வழக்கு

சாத்துார்: வெம்பக்கோட்டை பேர் நாயக்கன்பட்டியில் ருத்திரப்ப நாயக்கர் தீப்பெட்டி ஆபிசில் அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரிக்கப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு வி.ஏ.ஓ கணேசன் தலைமையில் வருவாய் துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது அதிகாரிகளை கண்டதும் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினர். அதிகாரிகள் பேன்சி ரக பட்டாசுகள், திரி, மூலப் பொருட்கள் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி ராமர் 42. பேர் நாயக்கன்பட்டி ருத்ரப்ப நாயக்கர் ஆகியோர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ