மேலும் செய்திகள்
வீணாகும் தாமிரபரணி குடிநீர் சீரமைக்க எதிர்பார்ப்பு
14 hour(s) ago
கல்லுாரியில் கருத்தரங்கம்
14 hour(s) ago
ராஜபாளையத்தில் அனுமன் ஜெயந்தி
14 hour(s) ago
சாத்துார்: சாத்துார்-மதுரை பஸ் ஸ்டாப்பில் கழிப்பறை வசதியின்றி பயணிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சாத்துார் காமராஜபுரம் தெருவில் வசிக்கும் மக்கள் மதுரை பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பயணிகளும் பயன்படுத்தி வந்த கழிப்பறை கடந்த ஒரு ஆண்டாக மூடி கிடப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இருக்கன்குடி மாரியம்மன் கோயில் கோட்டூர் குருசாமி கோயில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் சாத்துார் வந்து கோயில்களுக்கு செல்கின்றனர்.இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் தங்கள் இயற்கை உபாதையைகழிக்க போதுமான வசதியின்றி அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.சாத்துார் படந்தால் ரோடு நான்கு வழிச் சாலையில் நிற்கும் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க வசதியின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மதுரை பஸ் ஸ்டாப்பில் மூடிஉள்ள பொது சுகாதார வளாகத்தை சீரமைத்து தருவதன் மூலம் பயணிகளும் உள்ளூர் மக்களும் பயன்படுத்திக்ெகாள்ள வசதியாக இருக்கும்.எனவே நகராட்சி நிர்வாகம்மதுரை பஸ் ஸ்டாப் சுகாதார வளாகத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மேலும் நான்கு வழிச்சாலை சந்திப்பில் புதிதாககழிப்பறை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago