உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு ஊர்வலம்

குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு ஊர்வலம்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை, வேல்டு விஷன் சார்பில் நடந்த தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின ஊர்வலத்தை குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா தலைமை வகித்து துவக்கினார். முன்னதாக குழந்தை தொழிலாளருக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி