சாரோன் சிறப்பு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ராஜபாளையம்: ராஜபாளையம் சாரோன் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடந்தது. தாளாளர் பிரேமா தலைமை வகித்து தொடங்கினார். சிறப்பு ஆசிரியர்கள் ரோஸ்லின், மாலதி, முத்துச்செல்வி, கவிதா இறை பாடல்கள், வேதம் பாடினர். ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ.,தேவாலய சபை தலைவர் பால் தினகரன் பங்கேற்று பேசினார். ஜெயக்குமார் ஞான ராஜ், தொழிலதிபர் பால் ஜெயக்குமார் வாழ்த்தினர். மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட, மாநில அளவு விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்ற முத்துமாரி, மாரிமுத்து இருவரையும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். மாணவர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.