உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூடிய சுகாதார வளாகம், புதர்மண்டிய ஓடை, பள்ளமான ரோடு

மூடிய சுகாதார வளாகம், புதர்மண்டிய ஓடை, பள்ளமான ரோடு

சாத்துார்: மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம்,புதர் மண்டிய ஓடை, பள்ளமான ரோடு உட்பட பல்வேறு பிரச்சனைகளால் சாத்துார் அண்ணா நகர் குடியிருப்போர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாத்துார் அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வேல்முருகன், செல்வக்குமார், பொன்ராஜ், மாரிக் கண்ணன், சுரேஷ், முனிஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடியதாவது.அண்ணாநகர் குறுக்குத் தெருக்களில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு இருந்தது. பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டதால் குறுக்கு தெருக்களில் ஒரு பகுதி மட்டும் சேதம் அடைந்துள்ளது. இப்பகுதி பொது சுகாதார வளாகம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டது. இன்று வரை திறக்கவில்லை. இந்தப் பகுதியில் ஓட்டல்கள், டீக்கடைகள், பாஸ்ட் புட் கடைகள் அதிக அளவில் உள்ள நிலையில் இந்த பொது சுகாதார வளாகம் மூடிக்கிடப்பதால் கடை ஊழியர்கள் மக்கள் இயற்கை உபாதையை கழிக்க வசதியின்றி அவதிப்படுகின்றனர்.அண்ணா நகர், பெரியார் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. பயணிகள் நிழற்குடையும் நுாலகமும் கட்டித் தர வேண்டும்.வீடுகளுக்கு குப்பைகளை வாங்க துாய்மை பணியாளர்கள் வந்த போதும் குப்பைகளை இந்தப் பகுதியில் உள்ள ஓடையில் கொட்டி வருவதால் ஓடையில் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. ஒரு ஓடையில் முள் செடி புதர் போல வளர்ந்துள்ளது .தற்போது மழைக்காலமாக இருப்பதால் சிறிய மழை பெய்தாலும் இவற்றில் பதுங்கி உள்ள விஷப் பூச்சிகள் சாலைக்கும் வீட்டிற்கும் படையெடுத்து வருகின்றன.வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்ட போதும் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பல வீடுகளில் இருந்து கழிவு நீர் ஓடையில் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். கொசு மருந்து அடிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா நகரில் இருந்து செல்லும் கழிவு நீர் வைப்பாற்றில் கலப்பதால் ஆறு மாசு அடைந்து வருகிறது.கழிவு நீரை தனி வாறுகால் கட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சேர்ப்பதன் மூலம் ஆறு மாசு அடைவதை தடுக்கலாம். அண்ணா நகரில் இருந்து வெம்ப கோட்டைரோட்டுக்கு செல்லும் வழியில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் மக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி