உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுழைவு கட்டணம் வசூல்

நுழைவு கட்டணம் வசூல்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பில் கோயில்களுக்கு வரும் மக்களிடம் நுழைவு கட்டணம் , பார்க்கிங் கட்டணங்களை வனத்துறையினர் மூலம் வசூலிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக தாசில்தார் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான செண்பகத் தோப்பில் பேச்சியம்மன் மற்றும் காட்டழகர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணங்களை வனத்துறையும், அறநிலையத்துறையும் போட்டி போட்டு வசூலித்தது.இப்பிரச்சனை தொடர்பாக நடந்த சமாதான கூட்டத்தில் இரண்டு அரசு துறைகளும் கட்டணம் வசூலிப்பதை, கலெக்டரின் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் ஏற்கனவே எடுத்த முடிவின்படி செண்பகத் தோப்பில் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணங்களை வனத்துறையினர் மூலம் வசூலிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளதாக தாசில்தார் செந்தில்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை