உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரியில் அங்காடி திருவிழா

கல்லுாரியில் அங்காடி திருவிழா

விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் அங்காடி திருவிழா கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. துறை தலைவர் ஜோஷ்வா வரவேற்றார். மாணவர்கள் ஆடைகள், உடற்பயிற்சி சாதனங்கள், கைப்பைகள், விளையாட்டு பொருட்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை 38 அரங்குகள் அமைத்து ரூ.5 லட்சத்திற்கு மேல் மாணவர்களே விற்பனை செய்தனர். உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேர்த்தி யான திட்டங்களை வடிவமைத்து செயல்பட்ட மாணவர்களுக்கு சிறந்த அங்காடிக்கான பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ