மேலும் செய்திகள்
மாணவிகள் சாதனை
26-Dec-2024
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார். செயலர் சங்கர சேகரன் வரவேற்றார். தேவஸ்தான டிரஸ்டி கணேசன் தேசிய கொடியை ஏற்றினார். உறவின்முறை பொருளாளர் கனகராஜ் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். உதவி செயலர் பாலசுப்பிரமணி கல்லூரி கொடியை ஏற்றினார்.உறவின்முறை தலைவர் சுதாகர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். அம்பலகாரர் பிரேம்குமார், உதவி தலைவர் சுரேஷ்குமார், உதவி செயலர் சரவணன் சமாதான புறாக்களை பறக்க விட்டனர். விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பிகே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசி முருகன் மற்றும் சசிகலா, சாந்தி, பொன்மதி பரிசுகள் வழங்கினர். முதல்வர் செல்லத்தாய் நன்றி கூறினார்.
26-Dec-2024