உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் செல்லும் ரோட்டில் குடிமை பொருள் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினர். வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் வாகனத்தை சோதனை இட்ட போது அதில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. அதிகாரிகள் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை