மரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை. மனிதன் உயிர் வாழவே மரத்தின் துணை தேவை என்ற போதிலும் மரத்தினால் நமக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகள் ஏராளம்.புவி வெப்பமயமாதலை தடுக்கவும் காற்றில் ஆக்சிஜன் அளவை கட்டுக்குள் வைக்கவும் மனிதன் மற்றும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பயன்படுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலை கழிவுகள், மின்சாதனங்கள் வெளியேற்றும் வாயுக்கள் என மனிதன் ஏற்படுத்த மாசுகளால் நீர், நிலம், காற்று, ஆகாயம் போன்றவை தொடர்ந்து மாசடைந்து வருகின்றன. இதனால் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.இயற்கையை பாதுகாத்தல், காடுகளை அழிக்காமல் பாதுகாத்தல் நீர் ஆதாரங்கள் மாசடைவதை தடுக்க போன்ற நல்ல எண்ணங்கள் கல்லுாரி மாணவர்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும்.இதற்கு ஏற்ப சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் வளாகம் முழுவதுமே ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கல்லுாரி வளாகத்தில் உள்ள பல்வேறு பசுமையான மரங்கள் வளாகத்தை குளுமையாக்குகின்றன. தற்போது 103 மர வகைகளுடன் 4360 மரங்கள் உள்ளன.வயல் சார்ந்த வளமான பகுதிகளில் வளரக்கூடிய மருத மரங்களும் உள்ளன. இன்று வரை தொடர்ந்து பல வகையான மரக்கன்றுகளை நட்டு கல்லுாரி வளாகத்தை பசுமை படுத்தி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது, பசுமை பூமி வளாக விருது போன்ற விருதுகளை கல்லுாரி பெற்றுள்ளது.பசுமை தமிழக திட்டம், உலக சுற்றுச்சூழல் தினம், சுதந்திர தினம் மற்றும் தேச தலைவர்கள் பிறந்த தினம் போன்ற நாட்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த மரங்களுக்கு தேவையான தண்ணீர் மழைநீர் சேகரிப்பு திட்ட மூலம் வழங்கப்படுகின்றது.கல்லுாரி வளாகத்திற்குள் 27 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், மூன்று கிணறுகள் இரண்டு குளங்கள் உள்ளன. இதனால் வளாகத்திற்குள் நிலத்தடி நீர்மட்டம் எப்பொழுதும் குறையாமல் உள்ளது.நவீன காலத்தில் பெருகிவரும் வாகனங்களால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. சுத்தமான காற்று என்பது கேள்விக்குறியாக உள்ளது. சுத்தமான காற்று வேண்டும் என்ற அதிக அளவில் மரக்கன்று நட வேண்டும். இதனால் நகரும் பசுமையாக மாறி, மழை பொழிய காரணமாக இருப்பதோடு வெப்பமயமாதலையும் தடுக்கிறது. மரக்கன்றுகள் நடுவது சாதாரணமானது தான். ஆனால் அதனை பராமரிப்பது தான் முக்கியம்.- அபிரூபன், கல்லுாரி தாளாளர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி.
பராமரிப்பது தான் முக்கியம்
தற்போது கல்லுாரியில் நடப்படும் மரக்கன்றுகளை தோட்டக்கலை மன்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் பராமரித்து வருகிறது. தவிர அருகில் உள்ள கிராமங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. சிவகாசி சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை அளவைவிட கல்லுாரி வளாகத்தில் பெய்யும் மழையின் அளவு அதிகம். மாணவர்கள் இயற்கை சூழ்ந்த பசுமை வளாகத்தில் கல்வி பயில்வது மகிழ்ச்சியாக உள்ளது.- அசோக், கல்லுாரி முதல்வர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி.
இயற்கை சூழ்ந்த பசுமை