மேலும் செய்திகள்
சிவகாசி - திருத்தங்கல் மெயின் ரோடு சேதம்
20-Oct-2024
சிவகாசி : சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் நடுரோட்டில் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கு வழி வகுக்கிறது.சிவகாசியில் சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால் அனைத்து கனரக வாகனங்கள், நகர் பஸ்கள், பள்ளி கல்லுாரி பஸ்கள், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்று பாதையான செங்கமலநாச்சியாபுரம் ரோட்டில் வந்து செல்கின்றன. இதனால் இந்த ரோட்டில் எப்போதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் செங்கமல நாச்சியார் புரத்தில் நடு ரோட்டில் மாடுகள் நடமாடுகின்றன. தவிர ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே படுத்து விடுகின்றன. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை. டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் ஒலி எழுப்புகையில் மாடுகள் மிரண்டு ஓடும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே உடனடியாக இப்பகுதியில் ரோட்டில் நடமாடும் மாடுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
20-Oct-2024