உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டி

மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் பிசியோதெரபி மருத்துவ துறை சார்பில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. வேந்தர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். பல்கலை அணியும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அணியும் விளையாடி இரு அணிகளும் சமநிலை பெற்றன.வேந்தர் ஸ்ரீதரன் கேடயம், சான்றுகளை வழங்கினார். பாரா கிரிக்கெட் சங்க செயலாளர் முகுந்தனுக்கு இணை வேந்தர் டாக்டர் அறிவழகி நினைவு பரிசு வழங்கினார். துணை வேந்தர் நாராயணன், கல்லூரி முதல்வர் ஜோதி பிரசன்னா, மாணவர் நல இயக்குனர் பாலகண்ணன் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாண்டி மீனா, மிதின் மோகன், உஷா நந்தினி, உடற்கல்வி இயக்குனர் சிதம்பரம் செய்திருந்தனர். ஷிவானி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ