விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி
விருதுநகர்: வேளாண்துறை சார்பில் மாநிலம், மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகளுக்கு 50 சென்டில் பயிர் சாகுபடி பரப்பு இருக்க வேண்டும்.இதில் கம்பு, தினை, குதிரைவாலி, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்கள், செம்மை நெல், பாரம்பரிய நெல் சாகுபடியிலும் போட்டி நடக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார்.