உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., யில் சைக்கிள் போட்டி

ஸ்ரீவி., யில் சைக்கிள் போட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு சைக்கிள் போட்டி நடந்தது.நேற்று காலை 8:40 மணிக்கு மொட்டை பெத்தான் கண்மாய் இறக்கம் முதல் செண்பகத் தோப்பு வரை நடந்த சைக்கிள் போட்டியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர். சிவகாசி சப் கலெக்டர் பிரியா போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஆசிரியர் செல்வி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை