உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த நிலையில் மன்னர் கால செங்கல் சுவர்கள்

சேதமடைந்த நிலையில் மன்னர் கால செங்கல் சுவர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டை தலைவாசல் அருகே ஓட்டமடம் பகுதியில் காணப்படும் மன்னர் கால மண்டபத்தில், தற்போது சேதமடைந்து காணப்படும் செங்கல் சுவர்களை சீரமைக்க வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இப்பகுதியில் பல ஆண்டுகளாக காணப்படும் இந்த செங்கல் சுவர்களின் வேலைப்பாடுகள் அழகாகவும் மிக நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு சில கல் மண்டப துாண்களும் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. கல் துாண்களில் சிவலிங்கம், நாகம் மற்றும் பூ வேலைப்பாடுகளுடன் செதுக்கி உள்ளனர். எண்கோண பட்டைகள் கொண்ட கல் துாண்களும் வடிவமைக்கப்பட்டுஉள்ளது. தற்போது இந்த சுவர்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது.இது குறித்து வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் கந்தசாமி கூறுகையில், கோட்டை தலைவாசல் பகுதியில் காணப்படும் இந்த மண்டபம் ஒரு கோட்டையாக இருந்திருக்கலாம். இதன் அருகே ஒரு தெப்பம் காணப்படுகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது மன்னர் கால கட்டங்கள் போல் தெரிகிறது. தற்போது சேதமடைந்து காணப்படும் இத்தகைய செங்கல் சுவர்களை பாதுகாப்பது அவசியம். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !