மேலும் செய்திகள்
சேதமடைந்த சிக்னல்: வாகன ஓட்டிகள் தவிப்பு
21-Sep-2024
சிவகாசி : சேதமடைந்த பாலம் தடுப்புச் சுவர், டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை என வேலாயுத ரஸ்தா ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியில் பாலம் தடுப்புச் சுவர் சேதம், ரோடு சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வரும் நிலையில் முக்கிய பாதையாக வேலாயுத ரஸ்தா ரோடு உள்ளது. அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டின் வழியாகத்தான் சென்று வருகின்றன.இந்நிலையில் அரசு மருத்துவமனை செல்லும் ரோட்டில் ஓடையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவர் சேதம் அடைந்துள்ளது. வளைவுப் பகுதியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதே இடத்தில் டிராபிக் சிக்னல் செயல்படாததால் அடிக்கடி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. வேலாயுதம் ரஸ்தா ரோட்டில் பாதி அளவிற்கு மணல்கள் பரவி கிடக்கின்றது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். தவிர ரோடும் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.பாண்டியன், தொழிலதிபர்: வேலாயுத ரஸ்தா ரோடு திருத்தங்கல் ரோடு சிவகாசி ரோடு பிரியும் இடத்தில் டிராபிக் சிக்னல்கள் இல்லை. இதனால் இங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. தவிர விபத்து ஏற்படவும் வழி வருகிறது. எனவே இங்கு டிராபிக் சிக்னல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருப்பசாமி, தனியார் ஊழியர்: வேலாயுத ரஸ்தா ரோட்டில் அதிகமான மாடுகள் நடமாடுகின்றன. இவைகள் வாகனங்களுக்கு வழி விடாமல் ரோட்டிலேயே படுத்து கிடப்பதால் விபத்து ஏற்படுகின்றது.அதேபோல் அதிகமான நாய்கள் நடமாட்டத்தாலும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதே ரோட்டில் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்றது.
21-Sep-2024