உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சேதமடைந்த வருவாய் ஆய்வாளர் கட்டடம்

 சேதமடைந்த வருவாய் ஆய்வாளர் கட்டடம்

அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை அருகே பந்தல்குடியில் சேதமடைந்த வருவாய் ஆய்வாளர் கட்டடத்திற்கு செல்லவும், அருகிலேயே இடிந்த நிலையில் மேல்நிலைத் தொட்டி இருப்பதாலும் மக்கள் பீதியில் உள்ளனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பந்தல்குடி ஊராட்சிக்கு உட்பட்டது நெடுங்கரைப்பட்டி. இங்குள்ள மெயின் ரோடு அருகில் உள்ள மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் பல பகுதிகளில் சேதமடைந்ததுள்ளது. இதன் அருகில் ஆர். ஐ., அலுவலக கட்டடம் உள்ளது. இங்கு மக்கள் தினமும் பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற வந்து செல்வர். அலுவலக கட்டடமும் இடங்களில் இடிந்தும் பெயர்ந்தும் உள்ளது. அருகில் உள்ள மேல்நிலை தொட்டியும் இடியும் நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்குள் வந்து செல்ல மக்கள் தயங்குகின்றனர். புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் நடந்துள்ளது. பழைய மேல்நிலை தொட்டியை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தவும், ஆர்.ஐ., அலுவலக கட்டிடத்தை பராமரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்