உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் திட்டத்திற்காக சேதப்படுத்தப்பட்ட ரோடு

குடிநீர் திட்டத்திற்காக சேதப்படுத்தப்பட்ட ரோடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளத்தில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக தெரு ரோடு தோண்டப்பட்ட நிலையில் மீண்டும் சீரமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வேப்பங்குளம் கிராமம் தெற்கு தெருவில் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுப்பதற்காக கான்கிரீட் ரோடு தோண்டப்பட்டது. இதனால் சேதமடைந்த ரோட்டில் சகதி ஏற்பட்டு மழை நீர் தேங்கி மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தற்போது பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் ரோட்டை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பிள்ளையார் குளம் ஊராட்சி நிர்வாகம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும், குடிநீர் சப்ளையும் செய்யப்படவில்லை.எனவே, ரோட்டை சீரமைக்கவும், குடிநீர் சப்ளை செய்யவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை