உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., புலிகள் காப்பகத்தில் மான் வேட்டை; 5 பேர் கைது

ஸ்ரீவி., புலிகள் காப்பகத்தில் மான் வேட்டை; 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பகத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, தோட்டாக்கள், அரிவாள், 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் மலையடிவாரம் வ.புதுப்பட்டி மருதடி பீட் பண்டாரம் பாறை பகுதியில் நேற்று அதிகாலை 2:45 மணிக்கு 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, 3 டூவீலர்களில் வந்து புள்ளி மானை வேட்டையாடியதை கண்டறிந்தனர். அவர்களை பிடித்ததில் கான்சாபுரத்தைச் சேர்ந்த செல்லபாண்டி தப்பி ஓடி விட்டார். கிழவன் கோயில் காசிமாயன் 40, கோட்டையூர் கருப்பசாமி 25, சென்னை நிக்சன் சேவியர் 40, கான்சாபுரம் நல்ல தம்பி 25, கிருஷ்ணன் கோவில் துர்கா வேலன் 20, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 14 தோட்டாக்கள், 3 காலி தோட்டாக்கள், நெற்றி லைட், அரிவாள், சூரி கத்தி, எடை மெஷின், மான் தோல், ஒன்றரை கிலோ புள்ளிமான் கறி, 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !