உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே விஸ்வகர்மா சமுதாய அமைப்புகள் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.உ.ப.வா. கட்சி தலைவர் ஜம்புகேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் 5 தொழில்கள் செய்யும் விஸ்வகர்மா சமூகத்தினர் பாதிக்கும் விதத்தில் பி.எம்., விஸ்வகர்மா திட்டத்தில் 18 தொழில் செய்பவர்களை சேர்த்திருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் வாழ்வாரம் பாதிப்பதுடன் தங்கள் உரிமை பறிபோவதாக கூறி கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் விஸ்வகர்மா சமுதாய அமைப்புகள், எம்.கே.டி., பேரவையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ