விருதுநகரில் வளர்ச்சி கண்காணிப்புக்குழுக் கூட்டம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்நடந்தது.கலெக்டர் ஜெயசீலன், எம்.பி., மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், சீர்மரபினர் வாரிய துணைத் தலைவர் ராசா அருண்மொழி முன்னிலை வகித்தனர்.பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், உஜ்வாலா திட்டம், கவுசல் விகாஸ் யோஜனா, லோக்சபா எம்.பி., தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா, பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள், செயல்படுத்தப்பட உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு செய்து நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை எம்.பி., அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.