உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

வத்திராயிருப்பு,:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகளவு காணப்பட்டதால் நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவின்படி நேற்று முன்தினம் பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு மேல் 10:00 மணி வரை மலையில் பெய்த கனமழையினால் கோயிலுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகளவு காணப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். ஆனால் ஓடைகளில் அதிகளவு நீர்வரத்து இருப்பதால் அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் அடிவாரத்தில் நின்று கோயிலை நோக்கி சூடமேற்றி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.தொடர்ந்து தினமும் காலையில் ஓடைகளில் வரும் நீர் வரத்தைப் பொறுத்தே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர், கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ