உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்பார்வையாளர்களை இடமாற்ற கோரி தர்ணா

மேற்பார்வையாளர்களை இடமாற்ற கோரி தர்ணா

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், தங்களைமேற்பார்வையாளர்கள் இருவர் தரக்குறைவாக நடத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.நேற்று விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் அளித்த பேட்டி: துாய்மை பணியாளர்கள் தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் விருதுநகர் வந்திருந்த போது , அவரிடம் எங்களுக்கு மேற்பார்வையாளர்கள் ஜெயசுதா, சரண்யா ஆகியோரால் பிரச்னை உள்ளது என புகார் அளித்தோம். உடனடியாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் இதே இடத்திற்கு பணிக்கு வந்துள்ளனர். எங்களை பழிவாங்கும் நோக்கில் நடத்த போவதாக எச்சரிக்கின்றனர். வறுமை சூழலால் தான் இந்த பணிக்கு வந்தோம். வேலைவாய்ப்பு இல்லாவிட்டால் குடும்பம் கடும் சிரமத்தை சந்திக்கும். அமைதியான பணி சூழலில் பணிபுரிய உதவ வேண்டும். அவர்கள் இருவரையும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும், என கேட்டுள்ளனர்.கலெக்டர் ஜெயசீலன் இடமாற்றம் செய்வதாக உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ