உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலம் விரிவாக்க பணிக்காக இடித்த குடிநீர் தொட்டியை மீண்டும் கட்டாததால் சிரமம்

பாலம் விரிவாக்க பணிக்காக இடித்த குடிநீர் தொட்டியை மீண்டும் கட்டாததால் சிரமம்

சிவகாசி : சிவகாசி ஆனையூர் ஊராட்சி அண்ணாமலையார் காலனியில் பாலம், ரோடு விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்ட மேல்நிலைக் குடிநீர் தொட்டியை மீண்டும் கட்ட நிதி அதிகாரிகள் மனசு வைக்காததால் குடிநீருக்கும் மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றது. பாலம் பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே அண்ணாமலையார் காலனியில் 300 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அண்ணாமலையார் காலனி ரோட்டின் அருகில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி இயங்கி வந்தது. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணிக்காகவும், ரோடு விரிவாக்கத்திற்காகவும் ஆறு மாதங்களுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.அதே சமயத்தில் வேறு இடத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் தொட்டி கட்டும் பணிகள் துவங்கவில்லை. இதனால் அண்ணாமலையார் காலனி பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக மேல்நிலை குடிநீர் தொட்டியை கட்டி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி