ரேஷன் கடை திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராததால் சிரமம்
நரிக்குடி: நரிக்குடி நாலுாரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.நரிக்குடி நாலுாரில் 650 ரேஷன் கார்டுகள் உள்ளன. பழைய ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்ததால் சமுதாயக் கூடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதனால் நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. பழைய ரேஷன் கடையை அப்புறப்படுத்தி, அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. சில தினங்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ஒயரிங் வேலை முடியவில்லை. பாத்ரூம் வசதி கிடையாது. இன்னும் ஏராளமான வேலைகள் பெண்டிங் உள்ளன. அவசர கதியில் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. விரைவல் வேலையை முடித்து புதிய ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.