உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்

சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து இருப்பதால் மார்கழி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களை அனுமதிப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து நேற்று இரவு வரை வனத்துறை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.இக்கோயிலில் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்களை மலையேற அனுமதிக்கவில்லை.இந்நிலையில் ஜன. 9 பிரதோஷம், ஜன. 11 அமாவாசை வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், நேற்று முன் தினம் இரவு பெய்த மழையினால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களை அனுமதிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.இதுகுறித்து நேற்று மாலை 6:00 மணி வரை வனத்துறை சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை