உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் தொடரும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம்

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் தொடரும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம்

சாத்தூர் : உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்னும், நூறு நாள்வேலை வாய்ப்பு திட்டம் தொடர்வாக,புகார் எழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கலும் நேற்று முன் தினம் முதல் தொடங்கியது. இந்நிலையில், சாத்தூர் ஒன்றிய கிராமங்களில் கண்மாய்கள்,வரத்து கால்வாய்கள் தூர்வாறும் பணிகள், பிரதமர் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அமலுக்கு வருவதாக, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள போதிலும், கிராமங்களில், தற்போது பதவி வகிக்கும் ஊராட்சி தலைவர்கள் மூலமே 100 நாள் வேலை திட்டம் நடந்து வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ள ஊராட்சி தலைவர்கள், மீண்டும் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி பணம் வினியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென பல கட்சியினரும், மாநில தேர்தல் கமிஷனை வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ