உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாயமாகும் நடைபாதைகள்-- ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

மாயமாகும் நடைபாதைகள்-- ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதி பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை, முடங்கியார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட நகரை சுற்றிலும் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யப்பட்டு குறியீடு வரையப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடக்காததால் மேலும் புதிதாக முளைத்துள்ளன. சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோடு, தேசிய நெடுஞ்சாலை மகப்பேறு மருத்துவமனை முன்பு, மாடசாமி கோயில் மெயின் ரோடு ஆகியவற்றில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் அவை இருப்பதே தெரியாமல் தற்காலிக நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகளாக மாறி உள்ளன. சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அமைக்கப்பட்ட இவற்றை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் ரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. நகர் பகுதி போக்குவரத்து நெரிசலை சீராக்க நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, வருவாய் துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை