உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

சிவகாசி : சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.சிவகாசி பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப்பில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் அண்ணாத்துரை காய்கறி மார்க்கெட், பட்டாசு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. தவிர இந்த ரோட்டின் வழியாகத்தான் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். இதனால் எப்பொழுதுமே இந்தப் பகுதியில் போக்குவரத்து நிறைந்திருக்கும்.இந்நிலையில் மார்க்கெட் அருகே காலை 9:00 மணிக்கு மேல் லோடு வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி கடைகளுக்கு சரக்கு இறக்குகின்றனர். இதனால் டூவீலர்கள் செல்வதே சிரமமாக உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. ஏனெனில் ரோட்டில் நிறுத்தப்படும் லோடு வேன்களால் வேறு எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.சரக்கு ஏற்ற, இறக்க வரும் வாகனங்கள் காலை 7:00 மணிக்குள் வந்தால் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாது. இது குறித்து போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை யாரும் கடைபிடிப்பதில்லை. எனவே போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ