உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதியோர் இல்லத்திற்கு தீபாவளி பரிசுகள்

முதியோர் இல்லத்திற்கு தீபாவளி பரிசுகள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகமும், கல்லூரியின் இயற்பியல் துறையும் இணைந்து, சேதுராஜபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கின.கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், கலைக்கல்லூரி செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், முதல்வர் தில்லைநடராஜன், துணை முதல்வர் பவுர்ணா ஆகியோர் புத்தாடைகளையும், இனிப்புகளையும் வழங்கினர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர் ரத்தினசாமி தலைமையில், பேராசிரியைகள் சித்ராதேவி, சுபத்ரா தேவி, ஹேமா ரோஸ்லின், கண்மணி தேவி மாணவிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை