மேலும் செய்திகள்
பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
02-Sep-2025
அருப்புக்கோட்டை : தானங்களில் சிறந்தது அன்னதானம் பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. மனப்பூர்வமாக அன்னதானம் அளிப்பது செல்வத்தை அதிகரிக்கும். இத்தகைய புண்ணியம் கொண்ட அன்னதானத்தை அருப்புக்கோட்டை புளியம்பட்டி பாவடி தோப்பை சேர்ந்த விருதுநகர் தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி 13 ஆண்டுகளாக செய்து வருகிறார். பசியோடு வரும் ஏழைகளுக்கு முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 60 க்கும் மேற்பட்டவர்கள் இவருடைய அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டும், முடியாதவர்கள் கொண்டு சென்றும் சாப்பிடுகின்றனர். சாதம், கூட்டு, சாம்பார் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. வரமுடியாதவர்களுக்கு நேரில் சென்று வழங்குகின்றனர். என்னால் முடிந்தவரை அன்னதானம் வழங்க முயன்று வருகின்றேன் என பாபுஜி கூறுகின்றார்.
02-Sep-2025