உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அரசு மருத்துவமனைக்கு கண்கள் தானம்

 அரசு மருத்துவமனைக்கு கண்கள் தானம்

விருதுநகர்: விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் இறந்த இருவரின் கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டன. விருதுநகர் பெரியகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 34. இவர் வீட்டில் டிச.25ல் இறந்தார். அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டுவரப்பட்டது. இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் பாலாஜியின் இரு கண்களும் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் டிச. 25 காலை 10:00 மணிக்கு தானமாக பெறப்பட்டது. இதேபோல் விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரத்தை சேர்ந்தவர் ஜேசுமணி, 80. இவர் வீட்டில் டிச. 24ல் இறந்தார். இவரது கண்கள் டிச. 24 மாலை 5:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது. இந்த கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது உடனடியாக பயன்படுத்தப்படும்' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்