மேலும் செய்திகள்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பதற்றம்
27-Sep-2024
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் லோடு ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் 26, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, ராமசாமியாபுரத்தில் பஸ் மறியல் நடந்ததையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கூமாப்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 26, லோடு ஆட்டோ டிரைவர், திருமணமானவர். நேற்று மாலை 5:00 மணிக்கு கூமாப்பட்டி ஊரணி தெரு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.கூமாபட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூமாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு 7:00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராமசாமியாபுரத்தில் பஸ் மறியல் நடந்தது.இதனையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். விருதுநகர் எஸ்.பி. கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா சம்பவப் பகுதியை பார்வையிட்டு விசாரித்தனர்.
27-Sep-2024