ரயில் பாதையில் டிரைவர் உடல்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங் குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 33, இவர் கோயம்புத்தூரில் டிரைவராக இருந்தார். இவரது மனைவி மருதாயி. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. 2 தினங்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ரயில்வே ஸ்டேஷன் அருகே அருப்புக்கோட்டை - திருச்சுழி செல்லும் ரயில் பாதையில் பெரியசாமி ரயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா, என, விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.