அக்.18ல் மின் குறைதீர் முகாம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு : ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பாக நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்க்க விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, அக். 18 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கேட்டறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.