உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சார சேமிப்பு விழிப்புணர்வு

மின்சார சேமிப்பு விழிப்புணர்வு

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் மின்சார சேமிப்பு, பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விளக்க நிகழ்ச்சி நடந்தது.நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் எபி ஜேம்ஸ் வரவேற்றார். முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார்.நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய தலைவர் சுப்ரமணியன் நாட்டில் உற்பத்திக்கும் பயன்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை மின் சிக்கனம் மூலம் மட்டுமே சமன்படுத்த இயலும் என்று விளக்கினார்.சிறப்பு விருந்தினராக மின்வாரிய செயற் பொறியாளர் முத்துராஜ் மின்சாதனங்களை முறையாக கையாள்வதன் அவசியம் குறித்து பேசினார். மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை