யானைகள் விரட்டியடிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பந்தபாறை ரெங்கர் கோயில் பீட் வனப்பகுதியில் இருந்து மேல தொட்டியபட்டி கிராம குடியிருப்பு பகுதி நோக்கி, நேற்று இரவு யானைகள் வந்துள்ளது. இதனை பார்த்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறையினரும், கிராம மக்களும் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.