உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டை உயர்த்தியதால் வீடுகளுக்குள் செல்லும் கழிவுநீர்

ரோட்டை உயர்த்தியதால் வீடுகளுக்குள் செல்லும் கழிவுநீர்

ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சி 22 வது வார்டில் துார்வாரப்படாத ஓடை, தெருவோர ஆக்கிரமிப்புகள், ரோட்டை உயர்த்தியதால் வீடுகளுக்குள் செல்லும் கழிவுநீர் என அப்பகுதி மக்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.சங்கரபாண்டியபுரம் தெரு, சிவகாமியாபுரம் தெரு ஆகிய பகுதிகளை கொண்டது இந்த வார்டு. தென்காசி நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதி குடியிருப்புகளை விட வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் கடைகள், தெருக்களில் வீடுகளின் படிகள் என ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ளது.குடியிருப்புகள் இடையே வாறுகால் மண் மேவி உள்ளதுடன், கழிவுகளை வெளியேற்ற சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சாக்கடை தேங்கி பாதிக்கிறது.சிவகாமியாபுரம் தெரு ஓடை பாலத்தில் கைப்பிடி சுவர் இல்லாமல் குடியிருப்பு வாசிகள் விபத்திற்கு உள்ளாகின்றனர். குடியிருப்புகள் இடையே திரியும் பராமரிப்பற்ற நாய்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஓடைகளில் தேங்கும் கழிவுகள் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. பழமையான வீடுகள் இடையே உயர்த்தியுள்ள பேவர் பிளாக் ரோடு மழையின் போது சாக்கடை கழிவுகளை வீடுகளில் புகுந்து விடுகிறது. பாதாள சாக்கடை குழாய்கள் வாறுகால் தரைப் பாலம் அடியில் செல்லும்போது கழிவுகளுக்கு தடை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட கால சிக்கலுக்கு தீர்வு காண குடியிருப்பு வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி